ஆடுகளுடன் கைது செய்யப்பட்ட இருவர்
உரிய அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையகத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி உட்பட இருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டம் தோப்பூர் பகுதிக்கு அக்கரைப்பற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஆடுகள் கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி சட்டவிரோதமாக லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் மீட்கப்பட்டன. கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எச்.எம். லசந்த புத்திக தலைமையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துரிதமாகச் செயற்பட்டனர்.
47 மற்றும் 59 வயதுடைய இரு சந்தேக நபர்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.