சுற்றவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது
அநுராதபுரம் மற்றும் வீரம்பு கெதர பொலிஸ் பிரிவுகளில் புதன்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத வீடமைப்பு வீதியில் நேற்றுமுன்தினம், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசேட சுற்றவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள்
இதன்போது, 100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 90 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வீரம்பு கெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிதுருவெல்ல பகுதியில் வீரம்பு கெதர பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றவளைப்பில் 80 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.