நாட்டுக்கு வந்த சீன பெண்ணுக்கு நேர்ந்த நிலை; தடியால் தாக்கி கொள்ளையிட முயற்சி!
கொழும்பு கோட்டையில் இருந்து பயணித்த ரயிலில் சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு சந்தேக நபர்கள் இருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணித்த சீனப் பெண்ணின் கையை, வெளியிலிருந்து தடியால் தாக்கி அவரின் கைபேசியை சந்தேகநபர்கள் கொள்ளையிட முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசியில் பதிவு
இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.