யாழில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
யாழ்ப்பாண பகுதியில் கைப்பேசியை திருடிய நபரையும் அதனை வாங்கிய நபரையும் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய கவலில் அடிப்படையில் இன்று காலை தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசி வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில் நின்றவர் அதனை எடுத்து சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த உத்தியோகத்தர் சிறிது தூரம் சென்று பார்த்த பொழுது தொலைபேசியை காணவில்லை.
மீண்டும் அந்த இடத்திற்கு வந்து தேடிய பொழுது தொலைபேசி கிடைக்கவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சிசிரிவி கமரா உதவியுடன் குறித்த நபரை இனம் கண்டனர்.
அந்தவகையில் குறித்த நபர் வீதியில் நடமாடுவதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்ற நிலையில் குறித்த பகுதியில் வைத்து பொலிஸார் அவனை கைது செய்து விசாரித்தனர்.
அவர் அந்த கைப்பேசியை இன்னொருவருக்கு விற்றதாக கூறியுள்ளார்.
பின்னர் பொலிஸார் கைப்பேசியை வாங்கியவரையும் கைப்பேசியுடன் கைது செய்தனர்.
ஒருவர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்தது.
குறித்த கைப்பேசி 76000 ரூபா பெறுமதி வாய்ந்ததாகும்.
யாழ்ப்பாண தலமை பொலிஸ் நிலையத்தில் பாரபடுத்தி மேலதிக விசாரணையின் பின்னர் அவர்களை யாழ் நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.