TVKவின் வரலாற்று வெற்றி ; ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வந்த செய்தி ; திரைத்துறையினர் வாழ்த்து
தவெக தலைவர் விஜயக்கு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
“அனைத்து தடைகளையும் மீறி வெற்றிபெற்ற ஜனநாயகன் தளபதி விஜய் சாருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே மிகப்பெரிய புரட்சி. வரும் தலைமுறைகளிலும் இது எதிரொலிக்கும்” என கேவிஎன் தயாரிப்பு நிறுவனத் தலைசவர் வெங்கட் கே நாராயணா பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையினர் வாழ்த்து
அத்துடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அமோக சாதனை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
தன்னுடைய முதல் தேர்தலிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்றுப் பெருவெற்றி பெற்றுள்ள விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை முன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கட்சித் தலைவர் விஜய் அவர்களை வாழ்த்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், கட்சியின் உறுப்பினர்களுக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்புர்வ எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் “நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.