திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு. காலமானார்.
75 வயதான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை
அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக இறுதியாக கடந்த செப்டம்பர் 22–ம் தேதி மருத்துவமனை அறிக்கை வெளியானது.
இந்த நிலையில்70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்துவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் இரங்கல்
அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று முதல்வர் விஜய் உருக்கமாக கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்