C.ஜோசப் விஜய் எனும் நான்... ஓங்கி ஒலித்த குரல் ; தமிழக முதலவராக வாகை சூடிய விஜய் LIVE
Update : த.வெ.க. தலைவர் விஜய், C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்க்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (10) பதவியேற்றகவுள்ளார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.45 மணி அளவில் வந்தார். அவரை உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

விஜய் கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையுடன், Tuck செய்து இளைஞர் போன்று பக்காவாக வந்து இறங்கினர்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன் விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார். அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
[