இலங்கையில் சுனாமி ஆபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.
இருப்பினும், சாத்தியமான அதிர்ச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தொடக்கம் உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற டெக்டோனிக் எல்லை, மத்திய மலையகத்தைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கம் தொடர்பான பகுதிகள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் சுனாமி ஆபத்து ஏற்பட்டால் அது சுமாத்ராவின் முனையில் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
எனினும் சமீபக் காலமாக அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.