ஈரான் மீது இன்று மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்படும் ; டிரம்ப் எச்சரிக்கை!
வளைகுடா போர் பதற்றத்துக்கு மத்தியில், ஈரான் , அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இன்று மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளியிட்ட அறிவிப்பில், அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது என ஈரானின் இடைக்கால தலைமை சபை ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு அஞ்சியே ஈரான் மன்னிப்பு
எனினும், அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த முடிவு மாற்றப்படும் எனவும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் ,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு அஞ்சியே ஈரான் தற்போது அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரி "சரணடைந்துள்ளது". ஈரானின் மோசமான நடத்தை காரணமாக, இன்று ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும்.
இதுவரை தாக்குதலுக்கு உள்ளாகாத புதிய பகுதிகள் மற்றும் குழுக்கள் மீது "முழுமையான அழிவு மற்றும் நிச்சய மரணத்தை" விளைவிக்கும் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என பதிவிட்டுள்ளார்.