கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? டிரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி!
கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? என சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க அதிபரின் ஆணவ பேச்சுக்கு , எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் அமெரிக்காவுக்கு சேவை செய்யவில்லை. மனித குலத்திற்கு சேவை செய்கிறேன் கூகுள் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளமை டிரம்பை அதிர வைத்துள்ளது.
உலக பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை உலக அரங்கில் அவமதிக்க முயற்சி செய்தபோது, சுந்தர் பிச்சையின் அமைதியான அதே நேரத்தில் கொடுத்த அழுத்தமான பதிலால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை
இது வெறும் கருத்து மோதலாக அல்லாமல், கௌரவம், வலிமை, மற்றும் உண்மையான தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்தது. மாநாட்டில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அப்போது, ட்ரம்ப், இந்தியா தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயகம் பற்றி பெரிதாக பேசுகிறது. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அமைப்புகள் இல்லாமல் இந்தியாவின் இந்த முன்னேற்றம் சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கு , சுந்தர் பிச்சை பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் இந்தியாவில் பிறந்தவன். எனது நாடு எனக்கு கல்வியை அளித்தது, மதிப்புகளை கற்றுக்கொடுத்தது. அறிவுக்கும் தொழில்நுட்பத்திற்கும் பாஸ்போர்ட் கிடையாது. இந்திய ஆசிரியர்கள், பொறியாளர்கள், மற்றும் குடும்பங்கள் கொடுத்த தியாகம்தான் எனது பயணத்திற்கு அடித்தளம். சுந்தரின் இந்த நேர்மையான பதில் ட்ரம்ப்பை வியக்க வைத்தது. சிறிது நேரம் கழித்து ஜெய்சங்கர்,
“கூட்டுறவுகள் பலவீனம் அல்ல, அவைதான் பலம்” என்று கூறியபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. இரண்டாம் நாள், ட்ரம்ப் தனது அதிகாரத்தை கொண்டு மீண்டும் இந்தியாவை மிரட்ட முயன்றார்.
நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்
“இந்தியா அமெரிக்காவின் விதிமுறைகளை மீறினால் வர்த்தக தடைகளை எதிர்கொள்ள நேரிடும். கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா?” என்று சுந்தர் பிச்சையை நேரடியாக கேள்வி கேட்டுள்ளார்.
சுந்தர் பிச்சை சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், “நான் எப்போதும் முதலில் மனித குலத்திற்கே சேவை செய்வேன். அமெரிக்கா எனக்கு வாய்ப்புகளை தந்தது, இந்தியா எனக்கு வேர்களை தந்தது. நான் ஒன்றை கௌரவிக்க மற்றொன்றை தேர்ந்தெடுக்க தேவையில்லை.
நான் படைக்கும்போது, புதுமை காணும்போது, நான் இரு நாடுகளுக்கும் சேவை செய்கிறேன். நான் அனைவருக்கும் சேவை செய்கிறேன்” என்று ஆழமான பதில் அளித்தார்.
மாநாட்டின் இறுதி நாளில், ட்ரம்ப் தன் கோபத்தை வெளிப்படையாக காட்டினார். “இந்தியா இன்று இரவுக்குள் அமெரிக்காவுக்கு முழுமையாக தன் சந்தையைத் திறக்க வேண்டும். இல்லையென்றால், தடைகளை சந்திக்கும். கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா என்பதை இப்போதே சொல்ல வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
சுந்தர் பிச்சை அமைதியாக எழுந்து நின்றார். “ஒரு நாடு அல்லது எந்தவொரு தனிநபரோ மிரட்டினால் அதற்கு அச்சத்தால் அடிபணிவதை நான் விரும்ப மாட்டேன். பயத்தால் ஒருபோதும் மூலைக்கு தள்ளப்பட மாட்டேன், மரியாதைக்கு மட்டுமே கட்டுப்படுவேன்.
எந்த தேசமாக இருந்தாலும், அடிபணிய வேண்டும் என்று கேட்டால், நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று தீர்க்கமாக கூறினார்.
டிரம்புக்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சையின் இந்த பேச்சை அரங்கத்தில் இருந்த பல தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இந்த மாநாடு வெறும் வணிக பேச்சுவார்த்தையாக இல்லாமல், மனிதநேயம், தலைமைத்துவம் மற்றும் கொள்கைகள் தொடர்பான ஒரு திருப்புமுனையாக மாறியது. சுந்தர் பிச்சையின் இந்த வார்த்தைகள், பல கோடி இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், பெருமையையும் விதைத்தது.
அவர், அதிகாரத்திற்கு முன்னால் பணிந்து போக மறுத்து, தனது பணிவு, மரியாதை, மற்றும் உண்மையின் மூலம் ஒரு தேசத்தின் கௌரவத்தை நிலைநாட்டினார்.