பிபிசி மீது ட்ரம்ப் சட்ட நடவடிக்கை ; 5 பில்லியன் டொலர் மானநஷ்ட வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2021 ஜனவரி 6ஆம் திகதி அவர் ஆற்றிய உரையைத் திரித்துக் காட்டியதாகக் கூறி, பிபிசி செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தின் மீது 5 பில்லியன் அமெரிக்க டொலர் மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
புளோரிடாவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒளிபரப்பு நிறுவனத்தின் மீது மானநஷ்டம் மற்றும் வர்த்தக நடைமுறைச் சட்டத்தை மீறியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் பிபிசி ட்ரம்ப்பிடம் மன்னிப்புக் கோரிய போதும், நஷ்ட ஈடு கோரிக்கைகளை நிராகரித்ததுடன், மானநஷ்டக் கோரிக்கைக்கான எந்த அடிப்படையுமில்லை என்று மறுத்தது.
ட்ரம்ப்பின் சட்டக் குழுவினர், பிபிசி வேண்டுமென்றே, தீங்கிழைக்கும் நோக்குடன், ஏமாற்றும் விதமாக அவருடைய பேச்சில் மாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கிற்கு பிபிசி இன்னும் பதிலளிக்கவில்லை.