ஈரானுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை ; பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்அழிப்போம் ; கடும் தொனியில் ட்ரம்ப்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பமானதில் இருந்து முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (26) இடம்பெறுகின்றது.

பேச்சுவார்த்தை
அதில் பங்கேற்ற போதே அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால், அமெரிக்கா அவர்களைத் தொடர்ந்து அழித்துக்கொண்டே இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கள், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஈரானுக்கு இந்த உடன்படிக்கையில் விருப்பம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவந்தாலும், ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றே கூறி வருகின்றனர்.