நாடு திரும்பிய பஷில் ராஜபக்ஷவை வரவேற்க சென்றவர்களுக்கு சிக்கல்!(Video)
அமெரிக்காவில் இருந்து நாட்டுக்கு வந்த பஷில் ராஜபக்ஷவை வரவேற்க சென்ற பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்,மற்றும் உறுப்பினரை ஆணைக்குழுவில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
பஷில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு வருகை தந்தார். அவரை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்ரா பெர்னாண்டோ,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்.பி.பெரேரா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்...