திருகோணமலையில் இளைஞர் - யுவதிகளுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!
திருகோணமலை - தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் மாபெரும் பிரதேச தொழிற்சந்தை இன்றைய தினம் (16-03-2023) நடைபெற்றது.
இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த தொழிற்சந்தை பிரதேச செயலாளர் ஜனாப் MBM. முபாறக் தலைமையில் நடைபெற்றது.
இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் திறன்அபிவிருத்தி அமைச்சு இணை அனுசரனை வழகியதுடன், மாவட்ட மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக திறன் அபிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலையில் உள்ள பல்வேறுபட்ட அரச சார்பற்ற நிருவனங்கள் கலந்து கொண்டு தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கிருந்தார்கள்.
இந்த தொழிற்சந்தையில் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் வேலையற்றிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.