முன்னேறி செல்லும் இலங்கை! (Photos)
திருகோணமலை - மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 10 நாட்களுக்குப் பின்னர் இன்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒருவருக்கு 300 ரூபாய்க்கு மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
300 ரூபாய்க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் எமக்கு போதாது. இந்த அரசாங்கத்தில் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
மீனவர்கள் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கடந்த மாதங்களில் எரிபொருள், எரிவாயுவுக்காக ஆர்ப்பாட்டங்களையும், வீதி மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்ட பல மக்கள் தற்போது அமைதியான முறையில் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக் கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் தற்போது வரையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.