திருகோணமலையில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! மூவருக்கு நேர்ந்த நிலை
மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (28-01-2022) பிற்பகல் 2.00 மணியளவில் ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் ஹொரவ்பொத்தானை -100 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த மூவரையும், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிடுந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.