பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க தேரில் பவனி வந்த கோணேஸ்வரநாதன்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது.
இன்று காலை வசந்த மண்டபப் பூஜையை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க எம்பெருமான் தேரில் ஏறி அடியவர்களுக்கு அருட்காட்சியளித்திருந்தார்.
ஜந்தொழில்களில் ஒன்றான அழித்தல் என்ற சிறப்பியல்பை குறிப்பதே இந்த இரதோற்சவத்தின் மகிமையாகும். சைவர்கள் இந்த இரதோற்சவத்தில் கலந்து கொள்வதன் மூலம் செய்த பாவங்கள் அனைத்து விலகும் என்பது ஜதீகம்.
இன்று காலை எம்பெருமான் மாதுமை அம்பாள் சமேதமாக தேர் ஏறி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்திருந்ததுடன் நாளைதினம் தீர்த்தோற்சவம் நடைறெவுள்ளது.
தொடர்ந்து நாளை மறுதினம் பூங்காவனம் நடைபெறவுள்ளது.
ஈழத்திலுள்ள பஞ்ச ஈச்சரங்களில் திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.