திருகோணமலையில் பாரிய விபத்து: பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (01-04-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் திருகோணமலை - அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 48 வயதான முதியான்சாலாகே குணதிலக்க பண்டார யகம்பத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தெரியவருவது,
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும், கார் ஒன்றும் மோதியதிலே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற காரும் கந்தளாயில் இருந்து கபரனைக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளது.
விடுமுறையில் சென்று திரும்பி வரும் போதே, விபத்துக்குள்ளாகி அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.