இலங்கை கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்!
இரத்தினபுரியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) எடையுள்ள நீல மாணிக்ககக் கல் (ஷபையர்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கல் (star sapphire) எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 1,992 கோடி இலங்கை ரூபா) என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
கிணறு ஒன்றைத் தோண்டும்போது இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் உரிமையாளர் கமகே, பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரத்தினக்கல்லுக்கு செரன்டிபிட்டி ஷபையர் (Serendipity Sapphire) என பெயரிடப்பட்டுள்ளது ”