சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி; ஏப்ரல் முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்
சுக்கிரன் அசுரர்களின் குருவாக இருந்தாலும், வேத ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக உள்ளார். இவர் செல்வம், செழிப்பு, அன்பு, ஆடம்பரம், காமம், மகிழ்ச்சி போன்றவற்றுக்குக் காரணி கிரகமாவார்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி
ஏப்ரல் 01 ஆம் திகதி சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. அதிகாலை 4:25 மணிக்கு சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் இடம்பெயர்கிறார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்களது தொல்லைகள் தீரும். நற்பாதை அமையும்.
மேஷம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும்.
ரிஷபம்
ஏப்ரல் 1 அன்று நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும். வாழ்க்கையின் பல பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் நன்மை ஏற்படும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
கும்பம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அளிக்கும். திடீரென்று பண வரவு அதிகமாகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. வேலையின்மை நீங்கும், வேலை தேடல் நிறைவடையும். இந்த நேரம் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் நல்லதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி அதிக அனுகூலமான நன்மைகளை அளிக்கும். மகிழ்ச்சியும், வளமும் அதிகரிக்கும். நிதி ரீதியான நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நன்மைகள் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.