ரயில் சேவைகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் வேலைநிறுத்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதன் காரணமாக இன்று (11. 09.2023) நள்ளிரவு முதல் ரயில்கள் இயக்கப்படாதென அறிவித்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ரயில்வே கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ரயில்வே ஊழியர்கள் பகல் முதல் திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பல மாதங்களாக ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததாலேயே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (11.09.2023) மாலை அறிவித்திருந்த பின்புலத்திலேயே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நள்ளிரவு முதல் போராட்டத்தை ஆரம்பழக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.