மலையகத்துக்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று காலை 7 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனிடையே, மண்சரிவு காரணமாக கடிகமுவ மற்றும் பலான இடையேயான ரயில் பாதையை அடைவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பின்வரும் ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் பின்வருமாறு:
பிற்பகல் 03.35 கொழும்பு கோட்டை முதல் கண்டி
மாலை 04.35 கொழும்பு கோட்டை முதல் மாத்தளை
மாலை 05.15 கொழும்பு கோட்டை முதல் கண்டி
மாலை 05.55 கொழும்பு கோட்டை முதல் கண்டி
இரவு 08.30 கொழும்பு கோட்டை முதல் பதுளை
இரவு தபால் ரயில் பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரையிலான ரயில் உட்பட 18 சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.