விருந்து உபசார நிகழ்வுக்கு சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடகமுவ வெல்யாய பகுதியில் இன்று (08) ஜீப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காயமடைந்த சாரதி உள்ளிட்ட 9 பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் 19 வயதுடைய தொடகமுவ தோட்டம், பலாபத்வல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில் மாத்தளை பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் சிலர் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்து உபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டுயுள்ளனர்.
விருந்து முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.