தேனெடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; பறிபோன உயிர்
அனுராதபுரம், கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகஹவெல குளக்கட்டு வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர், கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வீரவில பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஆவார்.
உயிரிழந்த நபரும் மேலும் இருவருமாகத் தேனெடுப்பதற்காக மொரகஹவெல வனப்பகுதிக்குச் சென்றிருந்த போதே இக் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.