மட்டக்களப்பில் தாய் ஒருவருக்கு நேர்ந்த சோகம்; மகளின் கொடூரச் செயல்
மட்டக்களப்பில் மகள் ஒருவர் தாயை அறையொன்றில் அடைத்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 60 வயதுடைய தாயையே பிரத்தியோகமான அறையொன்றில் சித்ரவதை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அடைத்து வைத்து சித்ரவதை செய்த மகள்
ஏறாவூர் 3ஆம் பிரிவு வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஸாகிலா உம்மா என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வெற்றுக்காணியில் சிறைச்சாலைகள் போல பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அறையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி சிறைக் கைதியை போன்று அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரான பெண் வெளியில் சென்று கதைப்பதாகவும் அதன் காரணமாக அவரது மகள் அவரை அடைத்து வைத்துள்ளதாகவும் கம்பி கூட்டின் கதவில் நின்று கொண்டு கதவை திறக்குமாறு தினமும் அழுது புலம்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.