யாழில் தந்தையால் மகளுக்கு நேர்ந்த சோகம்
தந்தையால் 7 வயது மகளுக்கு துஷ்பிரயோக தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
5 நாட்களுக்கு முன்னர் அவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என குறித்த சிறுமியால் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
அதற்கமைவாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆபாச காணொளிகளை வற்புறுத்தி காண்பித்தே அவர் வன்புணர்விற்கு முயற்சித்துள்ளார் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.