யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா - தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே இன்று (25) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரும் அவரது மனைவியும் இன்றையதினம் மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதிக்கு சென்றிருந்தனர்.
பின்னர் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று குளித்துக்கொண்டிருந்தவேளை அவர் மயங்கி விழுந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.