மது போதையில் விபரீதம்: தொடருந்து மோதி உயிரிழந்த இளைஞன்
மட்டக்களப்பு பிரதேசத்தில் மது போதையில் தொடருந்து பாதையில் சென்று கொண்டிருந்த போது தொடருந்தினால் மோதப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (2023.11.23) மாலை இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ்; மரணம் குறித்து விசாரணை இன்று ; பெருமளவு பொலிஸார் குவிப்பு!
பொலிஸார் விசாரணை
உயிரிழந்தவர் மட்டக்களப்பு , குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர், மட்டக்களப்பு இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.