குளிப்பதற்குச் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்
காலியில் நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
காலி தர்மபால மாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற போதே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளிப்பதற்கு சென்ற நபர்
குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் நள்ளிரவு 12.00 மணி ஆகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் உறவினர்கள் சென்று கிணற்றில் இருந்த வலையை உடைத்து பார்த்தபோது சுமார் 15 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.