எரிபொருள் வரிசையில் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு நேர்ந்த பெரும் சோகம்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பொத்துவில் லகுகலையைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய 51 வயதுடைய திசாநாயக்கா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாள் பெற்றோலை பெறுவதற்காக சம்பவதினமான இன்று காலையில் இருந்து காத்திருந்த நிலையில், திடீரென மயக்கமுற்று கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
உய்ரிழந்தவர் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.