கீரிப்பிள்ளையால் உயிரிழந்த வர்த்தகர்
கீரி கடித்ததில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் சிலாபத்தில் இடம் பெற்றதாகவும் அவருடைய வீட்டிற்குள் புகுந்து கீரி கடித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம்
குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்த கீரி ஒன்றை விரட்ட முற்பட்ட போது குறித்த கீரி அவரது கால் விரலை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய மாவில, நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.