வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர் பகுதி வர்த்தகர் அதிரடி கைது
சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபா பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள்
மூதூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, அதனை அங்கிருந்து இந்தியாவின் பெங்களூரு நகருக்குக் கொண்டுச் சென்றுள்ளார்.
அதிநவீன போர் விமானங்களுடன் ஈரான் நோக்கி விரையும் அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல் ; அதிகரிக்கும் பதற்றம்
பின்னர் பெங்களூரிலிருந்து இன்று அதிகாலை அவர் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.