இறக்குமதி செய்யப்பட்ட டின்மீனில் நச்சுத்தன்மை; திருப்பி அனுப்ப நடவடிக்கை !
ஒருகொடவத்தை சுங்க முனைய களஞ்சியசாலையிலிருந்து , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின்மீன்கள், கைப்பற்றப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட டின் மீன்களின் மொத்த பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இறக்குமதி
இந்த டின் மீன்கள் சுற்றாடல், வனஜீவராசிகள், வள வனங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தியினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நச்சுத்தன்மை மிக்க டின் மீன் தொகைகளானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டின் மீன்களை ஏற்றுமதி செய்த நாடுகளுக்கே மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.