இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!
நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு முழுவதுமாக பதிவுசெய்யப்பட்ட மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
7 மாதங்களில் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள்
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை 27ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், 2022ஆம் ஆண்டின் 12 மாதங்களை விட 4 சதவீத அதிக சுற்றுலா பயணிகளின் வருகையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு 7 லட்சத்து 48 ஆயிரத்து 377 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 7 மாதங்களில் சுமார் 7 லட்சத்து 50 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் கடந்த ஜூன் மாதம் நாட்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதன்படி, இந்த முதல் 7 மாத காலப்பகுதியில் 6 மாதங்களில் மாதாந்த சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.