இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்
நவம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 82,270 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 20,217 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள்
இது 24.6% ஆகும். மேலும் ரஷ்யாவிலிந்து 10,668 பேரும் ஜெர்மனியிலிந்து 6,312 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5.765 பேரும் பிரேஞ்சிலிருந்து 3,506 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில் இம் மாதத்துக்கான சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி 2025ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 443,622 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 180,592 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 144,308 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், 123,053 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 115,400 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.