நுவரெலியா தபால் நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்திற்குள் பார்வையிட்டுள்ளனர்.
நேற்றுடன் (24) தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்த நிலையில், இன்று நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் வழமை போல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
இதனிடையே கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுற்றுலாத்தளமாக விளங்கும் நுவரெலியா தபால் நிலையத்தின் உட்பகுதியை பார்வையிடவும், சேவைகளை பெற்றுக்கொள்ளவும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.

18 வருடங்களின் பின் தாயகம் வந்த குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!
எனினும் மீண்டும் இன்று சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்திற்குள் பார்வையிட்டதுடன், தங்களது சேவைகளையும் இன்று பெற்றுக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.