இலங்கையை நோக்கி தொடர்ந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!
இலங்கைக்கு தொடர்ந்து நான்காவது மாதமாக ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஜனவரியில் 102,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 மார்ச் மாதத்தில் 125,495 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரலில் இதுவரை 87,316 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதேவேளை, ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 422,995 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.