சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் மாயம்; 3 நாட்களின் பின் மயங்கிய நிலையில் மீட்பு
திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி, கடந்த 26ம் திகதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவிலுக்கு அருகில் மீட்பு
தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மூன்று நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் மருத்துவ பரிசோதனையின் பின்னர், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.