வடக்கில் சூறாவளி எச்சரிக்கை; வெளியான முக்கிய அறிவிப்பு!

Climate Change
By Sundaresan Dec 08, 2022 06:41 AM GMT
Report

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடல் பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். தற்போது வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை உடனடியாக திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சூறாவளி எச்சரிக்கை; வெளியான முக்கிய அறிவிப்பு! | Tornado Warning In The North Important

இதேவேளை வடமாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 420 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறைக்கு கிழக்காக 492 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது.

தற்போது இதன் மையப்பகுதியின் அமுக்கமானது 997 மி.பா. ஆக மாறியுள்ளது. இது இன்று பிற்பகல் 994மி.பா. ஆகவும் குறைவடைய வாய்ப்புக்கள் உண்டு. ஏற்கெனவே அறிவித்தபடி இதற்கு 'மண்டாஸ்' என பெயரிடப்படும்.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 09.12.2022 இரவு அல்லது 10.12.2022 அருகே இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணம் மற்றும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலின் நகர்வுப் பாதை தற்போது வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அமைவு பெற்றுள்ளது. எனவே இந்த புயலினால் எமக்கு நேரடியான எத்தகைய பாதிப்பும் இடம்பெறாது. எனினும் இன்றுமுதல் (08.12.2022) குறிப்பாக நண்பகலுக்கு பின்னரிலிருந்து மழை கிடைக்க தொடங்கும்.

இது எதிர்வரும் 11.12.2022 வரை நீடிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மிதமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. .காற்றைப் பொறுத்தவரை கரையோரப் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ.வேகத்திலும் உள்நிலப்பகுதிகளில் மணிக்கு 30-45 கி.மீ. வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம். நாம் புயலின் நகர்வுப் பாதையிலிருந்து விலகியே இருப்பதனால் பதிப்பு தொடர்பாக நாம் அதிகம் பீதி கொள்ள தேவையில்லை. ஆயினும் சற்று வேகமான காற்றுடன் கூடிய கனமழையை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பது அவசியம்.

அதே வேளை புதிய தாழமுக்கம் ஒன்று எதிர்வரும் 12.12.2022 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்குரிய ஏதுநிலைகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US