ஆசியாவின் ராணி குறித்து இன்று விஷேட கலந்துரையாடல்
‘ஆசியாவின் ராணி’ என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய இயற்கையான கொருண்டம் நீல இரத்தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. குறித்த இரத்தினக்கல் இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய இரத்தினம் மற்றும் நகைகள் அதிகாரசபை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் இரத்தினக் கற்கள் வைத்திருக்கும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இது ஜெமோலொஜிக்கல் இன்ஸ்டிட்யூட் மற்றும் ரிசேர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
அதேவேளை 310 கிலோ கொண்ட இந்நீலக்கலின் கரட் அளவு அண்ணளவா 1.5 மில்லியன் என இரத்தினக்கல் உரிமையாளர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் சமில சுரங்க தெரிவித்துள்ளார்.
Sri Lankan authorities put on show what they said was the world's largest natural corundum blue sapphire, weighing more than 680 pounds. It was found in a gem pit about three months ago https://t.co/DDja7KAxmQ pic.twitter.com/GGPVNXvtdo
— Reuters (@Reuters) December 12, 2021
கொழும்பில் இருந்து 65 கிலோமீற்றர் தெற்கே ஹொரணையில் உள்ள இரத்தினக்கல் குழி உரிமையாளர் ஒருவரின் வீட்டில் இந்த நீலக்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பௌத்த துறவிகள் குழு ஒன்று ரத்தினக் கல்லை திறந்து வைப்பதற்கு முன்பு ஆசிர்வாதம் செய்தனர்.
இதேவேளை கடந்த ஆண்டு இரத்தினங்கள், வைரங்கள் மற்றும் பிற நகைகள் ஏற்றுமதி மூலம் இலங்கை சுமார் அரை பில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளதாக உள்ளூர் இரத்தினங்கள் மற்றும் நகை தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.