இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) நிலவிய அதே விலையிலேயே இன்றும் சந்தையில் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்தில் நீடித்து வரும் நிலையில், இன்றைய தினம் விலையில் மேலதிக அதிகரிப்போ அல்லது வீழ்ச்சியோ ஏற்படாமல் ஸ்திரமான நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.