இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணயமாற்று விகிதம்!
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வியாழக்கிழமை நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பலவீனமடைந்துள்ள நிலையில் பொருட்களின் இறக்குமதிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டை விட அடுத்த அண்டு நடுபகுதியில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எதிர்க்கட்சியினருகும் பொருளதார நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
அமெரிக்க நாட்டின் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 29 சதம், விற்பனை பெறுமதி 278 ரூபா 24 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 34 சதம், விற்பனை பெறுமதி 236 ரூபா 83 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 40 சதம், விற்பனை பெறுமதி 220 ரூபா 34 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 67 சதம், விற்பனை பெறுமதி 163 ரூபா 86 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 143 ரூபா 99 சதம், விற்பனை பெறுமதி 150 ரூபா 29 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 83 சதம், விற்பனை பெறுமதி 150 ரூபா 72 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 73 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபா 80 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 68 சதம்.
சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 96 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 22 சதம், குவைட் தினார் 670 ரூபா 97 சதம், பஹ்ரேன் தினார் 536 ரூபா 87 சதம், ஜோர்தான் தினார் 285 ரூபா 47 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 55 ரூபா 10 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.