இன்று ஆடி அமாவாசை ; யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?
இந்த ஆண்டு ஆடி அமாவாசை, 2025 ஜூலை 24 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று வருகிறது.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை மூன்றுமே முக்கியமானவை தான். ஆடி அமாவாசைக்கு பித்ருக்கள் பூமிக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு ஒரு உபசாரத்தை தெரிவிக்கவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
பித்ருக்கள், ஆடி அமாவாசைக்குதான் வாழ்ந்த குடும்பத்தை தேடி வருகின்றனர். மஹாளய அமாவாசை காலத்தில் இங்கே தங்குகின்றனர். தை அமாவாசைக்கு பூலோகத்திற்கு திரும்புகின்றனர் என சொல்லப்படுகிறது.
எனவே இந்த நாட்கள் பித்ருக்கள் வழிபாட்டிற்கு சிறந்தது. யார் மறுபிறவி எடுத்தார்கள், எடுக்கவில்லை என கண்டறிய முடியாது. எனவே இது ஒரு வகையில் நம் குடும்பம் சிறப்பாக, இருக்க செய்யும் வழிபாடு.
பித்ருக்களுக்கு இதை தான் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. எள்ளும் நீரும் கூட பித்ருக்களுக்கு மனநிறைவை கொடுக்கும்.
இதற்காக பணம் செலவு செய்ய வேண்டாம். இந்த சடங்குகளை யார் யார் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். தாய் தந்தை இல்லாத ஆண்கள் அவசியம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
குழந்தை இல்லாத, கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். முன்பு இதனை பெண்களும் கடைபிடித்துள்ளனர். பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு குறித்த குறிப்புகள் இருக்கின்றன.
எனவே, ஆண்களைப் போல் பெண்களுக்கும் தர்ப்பனம் கொடுக்கலாம். பெண்கள் கோவில்களுக்கு சென்று அன்னதானம் வழங்கலாம். அல்லது பெரியவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு கொடுக்கலாம்.