உலக முட்டை தினம் இன்று
உலக முட்டை தினம் இன்று (14) 1996 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச முட்டை மாநாட்டில் முட்டைக்காக ஒரு சர்வதேச தினத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போதிருந்து, ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் மாதம் உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாட்டில் முட்டையின் ஆண்டு உற்பத்தி 1000 முதல் 2000 மில்லியன் வரை உள்ளது.
விலை
இலங்கையில் தனி நபர் ஒருவரின் வருடாந்த நுகர்வு 174 முட்டைகளாகும். இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள், நாட்டில் முட்டை உற்பத்தி 164 மில்லியனாகவும், கோழி இறைச்சி உற்பத்தி 18 மெட்ரிக் தொன்னாகவும் குறைந்துள்ளது.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தி 21 மெட்ரிக் தொன்னாகவும் முட்டை உற்பத்தி 220 மில்லியனாகவும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு (2021) இலங்கையின் வருடாந்த முட்டை உற்பத்தி 2,934 மில்லியனாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு, கால்நடை தீவன பற்றாக்குறையால், முட்டை உற்பத்தி 34 சதவீதம் குறைந்து 1,963 மில்லியனாக உள்ளது.