இன்று சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி ; பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகளும், ஒரு நட்சத்திரத்தில் 3-4 மாதங்கள் வரை பயணிப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவான் மார்ச் 21 ஆம் திகதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

அதிர்ஷ்டம் காத்திருக்கும் ராசிகாரர்கள்
சிம்மம்: சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்தால், அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். மன அழுத்தம் குறையும். எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும்.
மிதுனம்: சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவைப் பெறக்கூடும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
மகரம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில சிறப்பான மாற்றங்களைக் காண்பார்கள். புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழிலை தொடங்கியிருந்தால், இக்காலத்தில் அதில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சனி பகவானின் ஆசியால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்