வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் இன்று! பெரும் திரளென கலந்துகொண்ட பக்தர்கள்
யாழ்ப்பணம் வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.
வசந்த மண்டவத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான் காட்சியானது அவர் பகதர்களை பரவசப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கந்தப்பெருமான் சித்திர தேரிலே பவனி வருகின்ற காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 2ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகிதொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் மஞ்சள்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெற்றிருந்தது. கடந்த 18ஆம் அருணகிரிநாதர் உற்சவமும், 19ஆம் திகதி கார்த்திகை உற்சவமும், நேற்று மாலை சப்பறத் திருவிழாவும் இடம்பெற்றிருந்தது.
மேலும் நாளைய தினம் தீர்த்தத்திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது. இதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்து கொள்ளுமாறு வட மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கடந்த வருடம் கோவிட் 19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது. எனினும் இம்முறை வழமை போன்று பெருந்திரளான அடியவர்கள் பங்கேற்வுள்ளதுடன் வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர்.