தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி இலக்கை அடைந்த இந்திய அணி
தற்போது இடம்பெற்று வரும் இவ்வாண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இடையிலான போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கார் படைத்திருந்த சாதனையைும் சமன் செய்துள்ளார்.
துடுப்பெடுத்தாடிய இந்திய அணி
சச்சின் டெண்டுல்கார் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை பெற்றுள்ள நிலையில், அதனை இன்றைய தினம் விராட் கோலி சமன் செய்துள்ளார்.
அதேநேரம் ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் லுங்கி நிங்டி , மார்க் ஜான்சன் , ககிசோ ரபாடா , கேசவ் மகாராஜ் ,தபேஸ் ஷம்ஷி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பின்னர் 327 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.