இன்று பிள்ளையானுக்கு நாளை NPPயோடு நிற்கும் உங்களுக்கு ; சட்டத்தரணி க.சுகாஸ்
அன்று மகிந்தவோடு இருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது இன்று என்.பி.பி யோடு இருக்கின்ற உங்களுக்கு நாளைக்கு நடக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் களுவங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிள்ளையானும் வியாழேந்திரனும்
அன்று மகிந்த ராஜபக்ஷ, கோட்பாய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்கவுக்கு உங்களுடைய மண்ணையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
பிள்ளையானும் வியாழேந்திரனும் கம்பி எண்ணியும் சிலர் இங்கும் திருந்த வில்லை அங்கும் திருந்த வில்லை இன்று மகிந்தவினுடைய மறுபுறமான ஜே.வி.பி யுடன் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கின்றனர்.
இன்று ஜே.வி.பி க்கு கூசா தூக்குகின்ற காவடி எடுக்கின்ற சகோதர்களுக்கு நாங்கள் அனுதாபத்துடன் சொல்லுகின்றோம் இன்றைக்கு பிள்ளையானுக்கு வியாழேந்திரனுக்கு நடந்து கொண்டிருப்பது நாளைக்கு வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நடக்கபோவது உங்களுக்கும் நடக்கும்.
தமிழனுக்கு என இருந்த யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிசொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மாவட்டம் எங்கே இன்ற அம்பாறை பெரும்பான்மை பறிபோய் விட்டது திருகோணமலை முக்காவாசி பறிபோய்விட்டது மிஞ்சி இருப்பது மட்டக்களப்பு இதையும் நாங்கள் பறிபோக விடுவோமாக இருந்தால் கிழக்கு ஒட்டு மொத்தமாக பறிபோய்விடும் என தெரிவித்துள்ளார்.