இன்று ஆவணி சதுர்த்தி; விநாயகர் அருளை அள்ளித் தரும் இலைகள்
இன்று ஆவணி சதுர்த்தி தினம். இந்த நாள் இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் நாளாகும். விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும்.
உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் "ஓம்' என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.
அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கும் விநாயகருக்கு ஆவணி மாத சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
அனைத்து காரியங்களையும் விநாயகரை வழிபட்டே செய்ய வேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம். .அந்த வகையில் விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என விநாயகர் புராணம் கூறுகிறது.
மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொல்லை நீங்க அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை, சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும்.
அதோடு அருகம்புல், செம்பருத்தி, வெள்ளெருக்கு, மாவிலை இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் வ்நாயக பெருமானின் பூரண அடையாலாம் எனவும் சொல்லப்படுகின்றது.
விநாயகர் சதுர்த்தி என்ற அற்புத நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையுடன் வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.