ஹர்சன் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
இன்று ஆகஸ்ட் 18, 2025 திங்கட் கிழமை, மிதுன ராசியில் குரு, சுக்கிரன், ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது.
இன்று சந்திரன் மிதுனத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம் நிறைந்த நாளில் துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் சேரும் என இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சிரமங்களைச் சந்தித்தாலும் சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று முடிவு எடுக்கும் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் செலவுகளை நிர்வகிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளுக்காக அதிகம் செலவிடுவீர்கள். இன்று நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் வேலையை முதலாளி பாராட்டுவார்கள். நண்பர்களுடன் அழகாக நேரத்தை செலவிடுவீர்கள். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடல்நல பிரச்சனை நீங்கும். உங்கள் வேலைகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இன்று உங்கள் வேலைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல புதிய திட்டங்களுடன் செயல்படுவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை மேம்படுவதற்கான சாதகமான நாள்.
மிதுன ராசி
மிதுன ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் வேலையில் பல தடைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுசரித்து பார்க்கவும். உங்கள் பணிகளில் முன்னேற தடைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்திப் படிக்க வேண்டிய நாள். அதிக கவனிச்சிதறல் இருக்கும். இன்று உங்களின் நம்பிக்கை என் கவனமும் அதிகரிக்க தியானம் செய்வது நல்லது. மன ஆரோக்கியத்தை அதிகரிக்க முயற்சி செய்யவும்.
கடக ராசி
கடக ராசிக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். உங்கள் துணையுடன் அழகான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சில சிறப்பான லாபத்தை அடைகிறது. பணியிடத்தில் உங்கள் வேலையை முடிப்பதில் முழு ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் வேலையில் புதிய உயரத்தை தொட முடியும். வியாபாரம் தொடர்பாக சில பொன்னான வாய்ப்புகள் பெறுவீர்கள். என்ற தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை தொடங்க வாய்ப்பு கிடைக்கும். பல விதத்தில் இன்று நல்ல நாளாக அமையும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு சாதகமான சூழல் இருக்காது. உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. சில பண பிரச்சனை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வேலைகளை முடிப்பதில் திட்டமிடல் அவசியம். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க தாமதம் ஏற்படும். சிலர் சொத்து தொடர்பாக வழக்குகளில் ஈடுபடுவீர்கள். வேலை தொடர்பாக சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். இன்று மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பாக சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் செயல்பாடுகளில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். இன்று உணர்ச்சிவசப்படுவதை விடுத்து செயல்களில் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் செயல்பாடுகளால் உங்களின் செயல்பாடுகளால் பிறரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக வெற்றிகளை பெற புதிய ஆலோசனையுடன் செயல்படுவீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் வேலையை முடிப்பதில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். முடிவு எடுக்கும் விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிக்கும். இன்று உங்கள் செயல்பாடுகளை தெளிவாக வைத்து முயற்சி செய்யவும். குடும்பத்தில் சில சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பது நல்லது. நிதி விஷயங்களில் பயன் அடைவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முயற்சி செய்யவும்.
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல நாளாக அமையும். பிற்பகுதியில் கவனமாக செயல்படுவது நல்லது. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. முக்கிய வேலைகள், முடிவெடுக்கும் விஷயங்களை காலையிலேயே முடிப்பது நல்லது. பணியிடத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்கு சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்கள் தொழில் தொடர்பாக சூழலை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சி செய்வீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளில் சிரமங்களை சந்தித்தாலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் தொடர்பாக சூழலை கவனமாக கையாளுவது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று அக்கம் பக்கத்தின் வருடம் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் அக்கறை காட்டவும்.
மகர ராசி
மகர ராசிக்கு சாதகமற்ற சூழல்கள் ஏற்படும். மனதை கட்டுப்படுத்திச் செயல்பட வேண்டிய நாள். இன்று நல்ல முடிவுகளை பெற புத்திசாலித்தனத்துடன் உழைப்பது நல்லது. இன்று பணவரவு குறைவாக இருக்கும். புதிய வேலைகளை தொடங்குவதற்கு சாதகமான நேரம் அல்ல. இன்று அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைகளில் கவனமாக செய்து முடிக்கவும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்கு வேலை தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் மரியாதை இருக்கும். ஆரோக்கியத்தை கவனம் செலுத்துவது நல்லது. புதிய திட்டங்களுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. புதிய வேலைகளை தொடங்குவதற்கு நல்ல நாளாக அமையும். உங்களின் செலவுகளை குறித்து சேமிப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடவும்.
மீன ராசி
மீன ராசிக்கு நல்ல நாளாக அமையும். உங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய நாள் புதிய உறவுகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான விவாதங்கள் வீட்டில் நடக்கும். உறவினர்களிடையே நம்பகத்தன்மை அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்கள் வீட்டிற்காக புதிய பொருட்கள் வாங்க முயற்சி செய்வீர்கள் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆராய்ச்சி பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு.